Social Icons

Donnerstag, 16. Februar 2017

உம்மாண்டி படத்தில் உழைத்த உழைப்பாளிகள்

இந்த சிறுகுறிப்பானது உம்மாண்டி படத்தில் உழைத்து கிரெடிட் கார்ட் பெயர்களுடன் மட்டும் நின்று போகும் உழைப்பாளிகள் பின்னால் நான் நுகர்ந்த அவர்கள் வியர்வையின் நறுமணத்தை தனித்தனியே பகிர்வதாகும்…
1) ஜனகன் சிவஞானம்.
எமது உறவு சினிமாக்காரர்களாக ஆரம்பித்த உறவு அல்ல ஆனால் நான் சினிமா எடுக்கிறேன் என்றதும் எனக்காக என்னோடு வெயில் காய்ந்த உறவு இவன்.
என்னைப் பொறுத்தவரை ஒரு இயக்குனருக்கான முற்று முழுதான தகுதிகள் கொண்ட ஒருவன் ஆனால் எத்தனை தடவை கேட்டிருந்தும் தனக்கு அந்த எண்ணமே இல்லை அண்ணா இது தான் அவன் பதிலாக இருந்தது.
என்னோடு
தொடரி குறும்படத்தில் – ஒளிப்பதிவாளர்
தாத்தாவில் – நடிப்பு
கொண்டோடி – உதவி இயக்குனர்
கருவறைத் தோழன் – உதவி இயக்குனர் என்பதோடு மட்டுமல்ல என் பெரும்பாலான படங்களின் திரைக்கதை ஆலோசனையில் இருந்திருக்கிறான்.

உம்மாண்டி திரைப்படத்திற்கான திரைக்கதை கலந்துரையாடலில் ஆரம்பத்தில் இருந்து படத்தின் அத்தனை கட்டங்களிலும் என்னோடு வருடக்கணக்காக இழுபட்ட ஜீவன்களில் ஒன்று.
படத்தில் உதவி இயக்குனர் என்று சாதாரணமாகக் கூறி விட்டுக் கடந்து போய் விட முடியாது. காரணம் நடிப்பவருக்கு நான் எழுதிய வசனங்களை நான் எதிர்பார்ப்பது போல சொல்லிக் கொடுப்பது என்பது அவனால் மட்டுமே முடிந்த காரியமாகும். காரணம் என்னோடு மிக நெருக்கமாக இருந்த தம்பிகளில் ஒருவன். நான் என்னென்ன mood இல் எப்படிக் கதைப்பேன். அந்தக் காட்சிக்கு என்ன mood create பண்ணி வைத்திருக்கிறேன் எப்படி எதிர்பார்ப்பேன் என்பது அவனுக்கு தெளிவாகத் தெரியும்.
நடிப்பவருக்கு வசனத்தை முதல் நாளே கொடுத்து படப்பிப்பு ஆரம்பிப்பது வேறு விடயம் அதே போல படப்பிடிப்புத் தளத்தில் வசனத்தைக் கொடுத்து உடனேயே சொல்ல வைப்பது என்பது வேறு. உம்மாண்டியில் இரண்டாவது ரகமே கடைப்பிடிக்கப்பட்டது காரணம் அந்தக் காட்சிக்குரிய mood என்னவெனத் தெரியாமல் அவர்கள் வசனத்தை அறிந்து வைத்திருப்பதில் எனக்கு உடன்பாடில்லை. இப்படியானதொரு நிலையில் நடிக்க வந்தவருக்கு வசனத்தை புகுத்துவது என்பது இலகுவான விடயமல்ல.
அந்த இடத்தில் தான் ஜனகன் பணி என்பது படத்தில் முத்திரையான இடமாகும்.
தற்போது கனடாவுக்கு குடிபெயர்ந்து அங்கு கற்பதோடு வானொலித் துறையிலும் கால் தடம் பதித்து சாதித்துக் கொண்டு வரும் அவனது அர்ப்பணிப்பான உழைப்புக்கு இன்னும் எத்தனையே வெற்றியிலக்குகள் வெகு அருகில் உள்ளது.
வாழ்த்துக்கள் ஜனா…
நாளை மறுதினம் இன்னொரு உழைப்பாளியுடன் இதே 7.30 மணிக்குச் சந்திக்கிறேன்

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates