Social Icons

Mittwoch, 24. Februar 2016

இரத்தினம் கவிமகனின் ”வேரோடும் விழுதுக்கான” சுபாரஞ்சன் வாழ்த்துக்கள்


வேரோடும் விழுது.......
தமிழ் வளர்த்த புலவர்களின் நீட்சியாகவே
உன்னை படைக்கப்பட்டு
ஒரு பதிப்பகம் தன்னை
வெளியிட்டு
ஒரு பதிப்பை படைத்து
ஒரு கவிஞனை /தந்தையை
அழகு பார்த்து தமிழ்
ஆழம் பார்த்து
நன்றாக நிறைவேறிய
தருணத்தில்.......
உன் புத்தகக் கண்ணாடியில்
முகம் பார்த்து மகிழ்ச்சி
பெற வாழ்த்துக்கள் .....
தேசத்து வலிகளை
தொடர்கின்ற துன்பங்களை
குருதி மை கொண்டு
கீறியிருப்பாய் என
உணர்கின்றேன்......
விரிந்த வாசகர் பரப்பில்
உன் படைப்புகளில்
பேச என்றும்
நிறைவான வாழ்த்துக்கள் ....

சுபாரஞ்சன் 


ஜெசுதா யோடவின் எல்லாம் மாயை ...!

இரந்து வேண்ட
அன்பு ஒன்றும்
பிச்சையில்லையே...
காசு பணத்தை தாண்டி
வந்த காதல் பாதியில்
பிரிந்ததும் இல்லையே...//

எதை நான் தேடினேன்
எது எனக்கு கிடைத்தது
எல்லாம் மாயை என்பதே
நான் கண்ட உண்மை ...//

காரணம் இன்றி
கண்களில் கண்ணீர்
காகிதமும் நனைந்தது
வார்த்தைகளும் மரணித்தது...//

ஓலமிடும் என் நெஞ்சு
உயிரற்ற உடலோடு
வேண்டாம் என்கிறது
இன்னொரு ஜென்மம்...//

ஆக்கம் ஜெசுதா யோ.ஜெசுதா யோ.

Dienstag, 23. Februar 2016

நெடுந்தீவு தனுவிபவளமல்லி பங்கயமே..

கொண்டையில மல்லி வைத்து
கொத்தாக எனை ஈர்த்து...
கொவ்வைப்பழ உதட்டால
கொல்லத்தான் பார்ப்பவளே...
வளைந்திருக்கும் கையினில
வளையல்கள் சிரிக்குதடி - நீ
வதனம் பார்த்து நடக்கையில
வண்டுகள் அழுகுதடி...
காதோர கம்மல்களாய்
காலோரம் சுத்துறனே...
காணாமல் நடிக்குறீயே - உன்
காதோர முடிபோல...
பச்சை வயலோரம்
பவளமாக போறவளே - அந்த
பங்கயமும் தோற்றிடுமே
பண்பான உன் முகத்தில்...
இடையிலே பானையோடு
இடுப்பாட்டி போறவளே...
இங்கிருந்து நோக்கையில
இதமாக இருக்குதடி...
கழுத்திலே வளையலிட்டு
கட்டுடலால் எனையீர்த்து...
கன்னத்தில் நச்சொன்று - நீ
கதறாமல் தந்திடவா.....நெடுந்தீவு தனு

Sonntag, 21. Februar 2016

வன்னிமாவட்டத்தை சேர்ந்த தேசிய,மாகாண,மாவட்டம் ரீதியாக கராத்தே ( 11.02.16) நடந்துள்தளது

வன்னிமாவட்டத்தை சேர்ந்த தேசிய,மாகாண,மாவட்டம் ரீதியாக பதக்கங்கள் பெற்ற கராத்தே வீர்கள் கௌரவிப்பு நிகழ்வு,

 கராத்தே ஆசிரியர் திரு.விஜயராஜ் அவர்கள் தலைமையில் 11.02.2016  கிளிநொச்சியில் நடந்துள்தளது

இந்த நிகழ்வில் வீரவீராங்கனைகளுக்கு யாழ்,கிளி,முல்லை மாவட்ட சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பதக்கங்களை வழங்கி கௌரவித்தார்.




Samstag, 20. Februar 2016

பா வானதி வேதா. இலங்காதிலகம்.எழுதிய சீர்திருத்தம்.

vethaகார் விலக்கி ஒளியாக்குதல்
சீர்திருத்தம் நவீன மாற்றமுமாகலாம்.
யார் திருத்தம் செய்தாலும்
ஆர்வமுடன் வரவேற்று ஒத்துழைக்கலாம்.
ஊர் உறவு நன்மையடைய
ஏர் பிடித்துழுது விதைப்பதாக
ஓர்மமாய் கல்வி சமுதாயமென
சீர்திருத்தலெனும் ஒழுங்கு ஏற்படுத்தலருமை.
நிர்ப்பயமற்று வாழ மனிதர்
சர்வாலங்காரத்தில் தங்கம் குறைக்கலாம்.
கர்நாடகத் தன்மை அழித்து
சர்வமமாய் பெண் விழிப்புணர்வடையலாம்.
கள்ளமற்ற வகையில் நேர்மையாய்
பிள்ளைகள் வாழ சிறுவயதிலேயே
நல்ல பாதை அமைத்து
வல்லமையாயச் சமதாயம் சீர்திருத்தலாம்.
(ஓர்மம் – உறுதி)
ஆக்கம்  
பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்

இரத்தினம் கவிமகனின் "வேரோடும் விழுது " (20.02.16)வெளியிடப்பட்டுள்ளது


இரத்தினம் கவிமகனின்   முதல் பள்ளியில் முதல் கவிநூலான "வேரோடும் விழுது " வெளியிடப்பட்டுள்ளது. கவிதை நூல்களை இரத்தினம் கவிமகன் அவர்களின்  வகுப்பாசிரியராக இருந்த திரு குமரகுருபரன் அவர்கள் முதல் பிரதியை பெற்று கொள்ள, கவிஞர் யோ.புரட்சி அவர்கள் சிறப்பு பிரதியை பெற்று கொண்டார். இரத்தினம் கவிமகனின்  தாயின் ஸ்கைப் வழி வாழ்த்து அரங்கத்தை நிறைத்தது,

 தொடர்ந்து  இரத்தினம் கவிமகனின் இன்னொரு அம்மாவான இந்து மகளிர் கல்லூரி உயர்தர தமிழ் பிரிவு தலைவர் திருமதி சத்தியபவாணி அவர்களின் வாழ்த்தோடும் அவர்  தந்தை தொடர்பான ஒலிசித்திரம் ஒன்று ஒளிபரப்பப்பட்டு

நிகழ்வுகள் தொடர்ந்த போது என்றது பள்ளி அதிபரான அ மு அருணாசலம் அவர்களின் வெளிஈட்டுரையுடனும் கவிஞர் சிந்துதாஸ் அவர்களின் மதிப்பீட்டுரையுடனும்  இரத்தினம் கவிமகனின்கவிதை வெளியீட்டு நிகழ்வும் நடை பெற்றது.

இவர் படைப்பு சிறப்புற இந்தச் சிறந்த சிந்தனையாளன்  எம்மவர் எழுத்துத்துறையின் சிறப்பு விளங்க வந்த இளம் எழுத்தாளனை ஈழத்துக் கலைஞர்கள் சார்பில் எஸ்.ரி.எஸ் இணையம் வாழ்த்தி நிற்கின்றது  

Freitag, 19. Februar 2016

"படைப்பாளிகள் உலகம்" பெருமையுடன் அறிமுகப் படுத்தும் "பிஸ்டல்" குறும்படம்


"படைப்பாளிகள் உலகம்" பெருமையுடன் அறிமுகப் படுத்தும் "பிஸ்டல்" குறும்படம்
பெருமையுடன் அறிமுகப் படுத்தும் இயக்குனர் உயர்திரு.சுதேசிகன் சுப்பிரமணியம் அவர்களின் "பிஸ்டல்" குறும்படம் இன்னும் சில நாட்களில் உலக திரைப்பட விழாக்களை ஆக்கிரமிக்க தயாராகிக் கொண்டு இருக்கின்றது என்பதை மகிழ்ச்சியோடு அறியத்தருகின்றோம்.
இங்கே படத்தின் ஆரம்பவிழா வடபழனி முருகன் கோயிலில் நடந்த பதிவும்,படத்தின் தலைப்பு வடிவமைப்பும் உங்கள் பார்வைக்கு.
சுதேசிகன் மிகச்சிறந்த கலைஞன்.தற்போது தமிழ் நாட்டில் வசித்து வரும் இவருக்கு உங்கள் வாழ்த்துக்களை வாரி வழங்குங்கள். இவர்கள் படைப்பு சிறப்புற  கலைஞர்கள் இணையம் எஸ்.ரி.எஸ் இணையம் வாழ்த்துக்கள் 

எஸ்.ரி.எஸ் இணையம்முடக்கப்பட்டுள்ளது அது மிண்டும் மீண்டுவரும்

கலைஞர்கள் இணையம் எஸ்.ரி.எஸ் இணையம்முடக்கப்பட்டுள்ளது அது மீண்டும் மீண்டுவரும்,

  கலைதாகம் கொண்டு இணைந்திட்ட நண்பர்களுக்காக தற்காலிகத்தளமாக www.stsstudio1.blogspot.de என்ற இணைப்பு http://www.ststamil.blogspot.com என்ற இணைப்புஉருவாக்கி தன் சேவையை தொடர்கின்றது,

 இதன் முதன்மை இணையம் வந்தாலும் இந்த இணையம் துணை இணையமாக இயங்கும் என்பதை ஈழத்துக் கலை ஆர்வலர்களுக்கு தொரிவித்து நிற்கின்றது எம்மவர்  கலைஞர்கள் இணையம் எஸ்.ரி.எஸ்

ஜெசுதா யோ எழுதிய நீ ஏங்கும் நேரமெல்லாம்

காற்றாக நான் இல்லையேன
கனக்கிறது மனது
நீ ஏங்கும் நேரமெல்லாம்
உன் மேனி தொட்டு வந்திருப்பேன்...

நீ நினைக்கும் நொடிகள் எல்லாம்
உன் அருகில் முத்தமிட்டுகொண்டே இருந்திருப்பேனல்லவா..?

முடியாது என்பது
மூளைக்கு தெரிந்தாலும்
இதயம் ஏனோ துடிக்கிறது
இத்தனையும் நடந்தால்
எத்தனை இன்பமென....//

ஆக்கம் ஜெசுதா யோ
















நெடுந்தீவு அரவிந்தின் வைகறைத்துயர்

ஒற்றை பனைத்  தோப்பினுள்ளே நெஞ்சைக் கழுவி என் ஆழ் மன வேர்களை கிளறும் உனக்கும் எனக்குமான ஓர் அத்யந்த உறவுக்குள் மூர்ச்சித்துக் கிடக்கிறேன். மொழி பெயர்க்கமுடியா என்னுணர்வுகள் பிசுபிசுத்து மூளைக்கனுப்பபடாத சோகங்கள் இயைபாக்கமற்ற தசை வழியே உருகிப்போகிறது. என் கண்ணீர் கோப்பைக்குள் தெரியும் வெண்ணிலவை என் நினைவெறிந்து துரத்துகிறேன். உன்னை தொட்டுணர  முடியாதென் விரல்களை இறுக பொத்திக்கொண்டென் மார்பில் குத்திக்கொள்கிறேன். என் நெஞ்சுடைத்து வழியுமென் துக்கப்பெருக்கை இடை நிறுத்திக்கொள்ள. என் தலை பிய்த்து பெருமூச்செறிகிறேன். உன் மார்பு கச்சைக்குள் நுழைய முடியாதென் காதல் கிரணங்களை எகிப்திய பிரமிட்டுக்களுக்குள் மம்மிகளாய் அடக்கம் பண்ணுகிறேன் மீண்டுமோர் உயிர்ப்புவரா உணர்வுகளாய்....
ஒற்றை பனைத்
தோப்பினுள்ளே
நெஞ்சைக் கழுவி
என் ஆழ் மன
வேர்களை கிளறும்
உனக்கும் எனக்குமான ஓர் அத்யந்த உறவுக்குள்
மூர்ச்சித்துக் கிடக்கிறேன்.
மொழி பெயர்க்கமுடியா
என்னுணர்வுகள்
பிசுபிசுத்து
மூளைக்கனுப்பபடாத
சோகங்கள்
இயைபாக்கமற்ற
தசை வழியே
உருகிப்போகிறது.
என் கண்ணீர்
கோப்பைக்குள்
தெரியும்
வெண்ணிலவை
என் நினைவெறிந்து
துரத்துகிறேன்.
உன்னை
தொட்டுணர
முடியாதென்
விரல்களை
இறுக பொத்திக்கொண்டென்
மார்பில் குத்திக்கொள்கிறேன்.
என் நெஞ்சுடைத்து
வழியுமென் துக்கப்பெருக்கை
இடை நிறுத்திக்கொள்ள.
என் தலை பிய்த்து
பெருமூச்செறிகிறேன்.
உன் மார்பு கச்சைக்குள்
நுழைய முடியாதென்
காதல் கிரணங்களை
எகிப்திய பிரமிட்டுக்களுக்குள்
மம்மிகளாய் அடக்கம் பண்ணுகிறேன்
மீண்டுமோர் உயிர்ப்புவரா
உணர்வுகளாய்..
..
ஆக்கம்நெடுந்தீவு அரவிந்


மாபெரும் உலகம் தழுவிய பாடலாசிரியர் போட்டி


தமிழ் அருள்[www.Tamilarul.com]இணையதளதினால் தமிழ் புதுவருடத்தினை முன்னிட்டு மாபெரும் உலகம் தழுவிய பாடலாசிரியர் போட்டி .

தமிழ் அருள்[www.Tamilarul.com]இணையதளதினால் தமிழ் புதுவருடத்தினை முன்னிட்டு மாபெரும் உலகம் தழுவிய பாடலாசிரியர் போட்டி . .
2016 இந்தப் போட்டியானது உலகம் தழுவிய அளவில் தமிழ் திரைத்துறைக்கு ஒரு புதிய பாடலாசிரியரை இனம் காண்பதற்கான ஒரு முயற்சி.

எங்கோ உலகின் ஒரு ஓரத்தில் வாய்ப்புகள் அற்ற நிலையில் வாழும் ஒரு கலைஞனின் வாசலில் வாய்ப்பை கொண்டு சேர்ப்பதே இந்த இலாபநோக்கற்ற போட்டியின் நோக்கமாகும்.

பாடலாசிரியர்களே நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.

பொதுவாக தமிழ் சினிமாவில் இடம்பெறும் பாடல்ககளின் சந்தர்பத்தை நன்கு கிரகித்து கொள்ளுங்கள்.

சூழ்நிலையை ஒட்டி பாடல் வரிகளை எழுதுங்கள். பாடல் வரிகள் மனதைத் தொடட்டும் .
புதிய கற்பனையாக இருக்கட்டும் சந்தத்தோடு சரியாக பொருந்தட்டும் சூழ்நிலைக்கும் mood க்கும் ஏற்றால் போல் இருக்கட்டும்.
பாடலில் நிறைந்த உணர்சிகள் தெரியட்டும் புதிய உவமைகள் காணப்படட்டும் .
நவீனத்துவம் தெரியட்டும் இனிமையாகவும் கவர்சியாகவும் இருக்கட்டும் .
இன்னொரு பாடலின் சாயல் இல்லாமல் இருக்கட்டும் இளமையான வரிகளாக இருக்கட்டும்.

நிபந்தனைகள் போட்டி எதிர்வரும் 20.03.2016 நிறைவடையும் போட்டியில் நடுவர்கள் வழங்கும் புள்ளிகள் இறுதியானவை.

போட்டியில் பங்குபற்றுபவர்கள் இந்த போட்டிக்கு எழுதும் பாடல்களை வெளியில் எங்கும் போட்டி முடிவுகள் வெளியாகும்வரை வெளியிடக்கூடாது.

போட்டியில் வெற்றி பெற்ற பாடல் திரைப்படத்தின் பாடல் வெளியிடப்படும் வரை வெளியிடலாகாது. வெற்றி பெற்ற பாடலை பாடலாசிரியரின் இணக்கப்பாட்டுடன் இசையமைப்பாளர் மற்றும் பட இயக்குனர் இணைந்து தேவைப்பட்டால் திருத்தங்களை மேற்கொள்ளலாம்.

பாடல்கள் அனைத்தும் மின்னஞ்சலில் மட்டும் subject எனும் இடத்தில் “PAADAL” /“பாடல்” என குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும்.

பாடல்கள் அனைத்தும் தமிழில் unicodeஎழுத்துருவில் மாற்றப்பட்டு அனுப்பப்பட வேண்டும்.

போட்டியில் கலந்துகொள்பவர்கள் தங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி இலக்கம், வசிக்கும் நாடு என்பன கண்டிப்பாக குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

பாடல்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :
tamilarul.news@googlemail.com tamilarulsong@hotmail.com

போட்டியின் உத்தியோகபூர்வ இணையத்தளம்

[தமிழ் அருள்]
யேர்மனி. (www.Tamilarul.com , email :-tamilarul@hotmail.com)
0049 / 1517116946

கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதியின் தடை ஓட்டங்கள்..!

இல்லாத காலத்திலும் இருப்பதைக் கொண்டு இனிப்புற வாழ்ந்தவர்கள். இதனை இதய இடுக்கில் இருத்தி தினம் நிமிர்வோம்..! தடைகளை உடைக்க தடை ஓட்டமும் தமிழுக்கு தனித்துவம். புரியாமல் ஓடினாலும் புகட்டிய பாடம் கோடி.! முடியாது என்று முற்றுப் புள்ளிகள் இட்டவர் விடியாமல் இருக்கின்றார் இருளில்.! பல தடைவைகள் விழுந்து எழுந்துஓடி எல்லைக் கயிற்றை எட்டித் தொட்ட அந்தக் காலங்கள் கற்றுத் தந்த பாடங்கள் வாழ்க்கையின் படிகள்.. தமிழரின் பாரம்பரிய விளையாட்டுக்களில் கிளித்ததட்டும்.! கபடியும்.! காலத்தின் கண்ணாடி. தடைகளை உடைப்பதும் விடைகளை தொடுவதும் வெற்றியின் உச்சங்கள்..! பார்வைக்கு வேடிக்கை வீர தீர விளையாட்டில் சிந்திய விஜர்வைக்கும் குருதிக்கும் வெற்றி ஒன்று தான் காணிக்கை..!
இல்லாத காலத்திலும்
இருப்பதைக் கொண்டு
இனிப்புற வாழ்ந்தவர்கள்.
இதனை இதய இடுக்கில்
இருத்தி தினம் நிமிர்வோம்..!

தடைகளை உடைக்க
தடை ஓட்டமும்
தமிழுக்கு தனித்துவம்.
புரியாமல் ஓடினாலும்
புகட்டிய பாடம் கோடி.!
முடியாது என்று
முற்றுப் புள்ளிகள்
இட்டவர் விடியாமல்
இருக்கின்றார் இருளில்.!
பல தடைவைகள்
விழுந்து எழுந்துஓடி
எல்லைக் கயிற்றை
எட்டித் தொட்ட
அந்தக் காலங்கள்
கற்றுத் தந்த பாடங்கள்
வாழ்க்கையின் படிகள்..
தமிழரின் பாரம்பரிய
விளையாட்டுக்களில்
கிளித்ததட்டும்.! கபடியும்.!
காலத்தின் கண்ணாடி.
தடைகளை உடைப்பதும்
விடைகளை தொடுவதும்
வெற்றியின் உச்சங்கள்..!
பார்வைக்கு வேடிக்கை
வீர தீர விளையாட்டில்
சிந்திய விஜர்வைக்கும்
குருதிக்கும் வெற்றி
ஒன்று தான் காணிக்கை..!

ஆக்கம் கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதி 



Donnerstag, 18. Februar 2016

யாத்ரா வின் அச்சம் தவிர் உண்மை பேசு''

ON AIR WIth Yathra யாத்ரா - www.tamilithal.fm 6.30pm - 7.30pm
மாற்றம் ஒன்றே மாறாதது , அந்த மாற்றத்திற்க்கான முதல் படி , 
அதிக தேடல்களுக்கும் , பல கேள்விகளுக்கும் கிடைக்கும் விடையாகும். அவ்வாறு கிடைக்கும் விடைகள் தெளிவினை ஏற்படுத்தும், அந்த தெளிவு புதியபாதைக்கும், புரட்சிக்கும் வித்திடும்.
அவ்வாறன மாற்றத்தை நோக்கிய பயணத்திற்க்கான தமிழன் ஆழுமையின் இளம்குரல் வளம்கொண்ட  ஆற்றல்கொண்ட ஊடகத்துறை சார் இளைஞன் யாத்ரா  வின் 
ஆழுமைமிக்க நிகழ்வு தான்  '' அச்சம் தவிர் உண்மை பேசு''
மெளனம் திறந்து , உண்மை உரைப்போம்...
எம் இனத்தையும் , எம் மொழியையும் காப்போம்.

என உள்ளதை பேச  உரிமையோடு அழைக்கும் ஆழுமைமிக்க இளைஞன் நிகழ்வு சிறப்புத்தன்மையும் பிறப்பின் உரிமையும் கொண்ட நிகழ்வு வளம்கொண்ட இளைம் கலைஞன் களம்கொண்டு ஆழுமையுடன் இன்னும் சிறக்க  எஸ்.ரி.எஸ்.இணைத்தினரின் வாழ்த்துக்கள் 

ஈழத்துப்பித்தன் எழுதிய;போர் கண்ட வம்சமெடி!!!














நிலமிடை தமிழ் வீரம்
நாட்டிப் பெண்டிர் நின்று
நீண்ட எல்லைகளின் சாமிகளாய்
நிலம் காத்த மண்ணிலிருந்து
நித்தம் வரும் சேதி கேட்க
நீறு பூத்த நெருப்புபோல்
நெஞ்சம் எல்லாம் கனல்கிறது
அங்கையற் கண்ணிகளாய்
அகிலம் முழுதும் அறிய
ஆயுதம் ஏந்தி நின்று
அசர வைத்த எம் குலப்பெண்கள்
அடி ஒற்றி வந்த பிஞ்சுகள்
அநீதியாய் அற்ப சுகத்துக்காய்
அரக்கர்கள் கரங்களில் மாள்வதோ?
பொறுத்தார் பூமி ஆழ்வாராம்
பொங்கினால் பயனேதும் இல்லையாம்
போங்கடா போங்கடா உங்கள்
பொறுப்பற்ற பதில்களைக் கொண்டு
பொங்கி எழும் தருணம் இது
பெண்டிரே குழல் கொண்டு
போர் கண்ட வம்சமெடி நீங்கள்
போகம் நீ என்று வன் புணர வரும்
பேயர் தனை துவம்சம் செய்ய
போர்க் கலை யாவும் கற்று
பெரும் புயலாக நின்றிறெடி
பேதை அல்ல ஈழம் தந்த
பெண்ணவள் என்றுணர்ந்து
பெருமையோடு வாழ்ந்திடெடி.


கவிஞை சுபாரஞ்சனின் கண்மணிகள்.....

இடைவெளியில்லாமல் நெஞ்சை உலுக்கும் செய்திகளாகவே பாலியல் பலாத்காரம்,வன்புணர்வுச் சம்பவங்கள்
இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது...

பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் அக்கறையற்ற சமூகமாக இருந்து விடாது, இக் கொடுமைகள் தொடர்பான கடைப்பிடிக்க வேண்டிய
அணுகுமுறைகள் மூலம் சமூக விழிப்புணர்வுடன் செயற்பட்டு குற்றத்தை நீதிமன்றம் ஏற்றி குற்றவாளியை தண்டிக்க சமூகம் ஒன்றுதிரள வேண்டும் !!!

வேட்டையாடிக் கொண்டிருக்கும் காட்டுமிராண்டிகளை ஒழித்துக்கட்ட
வேண்டும்.புரையோடிக் கொண்டிருக்கும் பெண்ணினத்தின் கொடுமைகளை களைய சட்டமன்றங்கள் விசேட பணியாக
செயலாற்ற வேண்டும்.
ஒமுக்கம் என்ற பெயரில் பாலியல் குற்றவியல் தொடர்பான கல்வியை அறியாமலே வளர்ந்தவர்கள் நாம் !!
எமது அடுத்த சந்ததியினராவது வாய் திறந்து பேசும் தைரியத்தையும் தெளிவான புரிதலையும் பெற கல்விமான்கள்,சமூக பணியாளர்கள்
அக்கறை கொண்டு குழந்தைகளின்
பாதுகாப்பையாவது உறுதிப்படுத்த ஆவன செய்வார்களா......???
அநீதிகளை மௌனமாக்கி சகித்துக் கொண்டு வாழ்ந்து முடிக்கின்றோம்
இந்தக் கொடுமைகளை அனுபவிக்கவா இவர்கள் பிறந்தார்கள்??

மிக மிக மனவேதனையோடு ஒரு பெற்றோராகவே இப்பதிவை இடுகின்றேன் ........

ஆக்கம் கவிஞை 




சுபாரஞ்சன் 

பூக்களைப்பறிக்காதீர்கள்...

மொட்டு விட்டு அலர்ந்த இளம் பூக்கள் வாழமுன் கசக்கி எறியப்படும் சேதிகள் கேட்டு கண்கள் கடலாகிறது. பெண்மைக்கு மதிப்பு மரியாதை கொடுத்து வாழ்ந்த இனத்திற்குள் பேய்களும் ரத்தக்காட்டேறிகளும் புகுந்தது எதனால்? பிள்ளைவளர்ப்பின் குறைபாடா? போதைபொருட்களின் தாக்கமா? வித்தியாவின் ரத்தக்கறை காயமுன்னே இன்று இந்த 14 வயதுக்குழந்தை காமுக பிசாசுகளால் கலங்கப்பட்டு கழுவேற்றப்பட்டிருக்கிறது... அடுத்த வீட்டில்தானே என்று கண்ணைமூடி இருந்தால் நாளை உங்கள் வீட்டு கதவை தட்டாது என்பதற்கு என்ன உத்தரவாதம்...,,வரலாறு படைத்த வீரம் விளையாடிய வன்னி மண்ணில் இந்த கொடுமையா?ஆண்டாண்டு காலமாக கட்டிக்காத்த கலாச்சாரமும், பண்பாடும் தொலைந்தே போய்விடுவதா?
ஐயகோ எப்படி இச்சம்பவத்தை எந்தன் வார்த்தைகளுக்குள் அடக்குவேன்? கண்களை மூடி ஒருகணம் சிந்தித்தால்
அந்த குழந்தை எப்படி துடிதுடித்து இருப்பாள்??? அவளின் இறுதி மூச்சு போகையில் அம்மா என்றுதானே கதறியிருப்பாள்.. இந்த வேதனையை என்னால் நினைத்துப்பார்க்க முடியவில்லை... அங்கு பெண்பிள்ளைகளை பெற்ற தாய்மார்கள் எத்தனை நாளைக்கு நெருப்பை வயிற்றில் கட்டிக்கொண்டு வாழ்வது?
காலம் பதில் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பதைவிட்டு எமது குழந்தைகளை காப்பாற்ற வேண்டியது ஒவ்வொரு தமிழ்குடிமகனின் கடமை...
சட்டங்கள் திருத்தப்பட வேண்டும்...
சமுதாயத்தின் தூண்களாக உள்ள ஆண்களே (தகப்பனோ தம்பியோ அண்ணாவோ)நீங்கள்தான் குழந்தைகளை நடமாடும் இந்த குட்டிப்பிசாசுகளிடமிருந்து காப்பாற்றியேஆகவேண்டும்...
மௌனித்து நீங்கள் இன்றிருந்தால் நாளை எம் வரலாற்றில் ஒரு கறைபடிந்த அத்தியாயம் புகுத்தப்படும்...
அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு...என்பதற்கிணங்க... ஒன்று சேருங்கள்.. சட்டத்தால் இந்த பதர்களை அழித்துவிடுங்கள்... இல்லையென்றால் நீங்களே பதர்களை எரித்துவிடுங்கள்...
இதற்குமேல் என்னால் எழுத முடியவில்லை... எழுத்துக்களை கண்ணீர் நனைக்கிறது... பெண்கள் நாட்டின் கண்கள்... பிடுங்கி எறியாதீர்கள்...

Mittwoch, 17. Februar 2016

நாங்கள் வருகின்றோம்.. நீங்கள் தயாராகுங்கள

நாங்கள் வருகின்றோம்.. நீங்கள் தயாராகுங்கள்.மண்ணின் வலி சுமந்த எங்கள் கதை சொல்லி எல்லோரது கண்ணீருக்கும் விடை சொல்ல நகைச்சுவையாலும் சிரிக்க வைத்திட உங்க
ள் அன்பிலும் ஆதரவிலும் நிமிர்ந்த நாம் தயா குணாவுடன் கவிநயன் ரம்மிய சிவா..! நீங்கள் ரெடியா..!

கலை ஒன்றுதான் வாழ்வில் நிலை என்று நினை மனமே

கலை ஒன்றுதான் வாழ்வில் நிலை என்று நினை மனமே இந்தச்சிறுமியர் நடனம் சிறப்புற்றதாய் அதன் பயிற்றுப்பாளரின் சிறப்பாய் மிளிந்துள்ளது வாழ்த்துதலுக்குரியது

தபேலாவின் மெல்லிய ஒலிகள்


தபேலாவின் மெல்லிய ஒலிகள் தாறுமாக மழைபோன்று பொழிய.... பேஸ் கிட்டாரின் தந்திகள் விட்டு விட்டு உறும... 'கொஞ்ச நேரம் ஒதுக்கி, கூந்தல் ஒதுக்கி, குறிப்பு எழுதுங்கள் எந்தன் தோளில்..' என்று ஜானகி காதுக்குள் சினுங்கிக் கொண்டிருக்க..., வைபரில் மெசேஜ் அனுப்புவதில் பிசியாக இருந்தேன் நான்..!!
என்னோடு அந்த 85 ம் இலக்க பேருந்துக்காக காத்திருந்த எல்லோருமே ஏறிவிட, முன் வாசலில், பேருந்தினுள் ஏறாமல், போனில் இருந்து கண்களை எடுக்காமல், மெல்லிய புன்னகையோடு ( கிட்டத்தட்ட லூசு மாதிரி ) டைப் பண்ணிக்கொண்டே இருந்தேன்..!!
'பிரான்சில் பிறந்திருப்பார்' என்று தோற்றத்தில் அனுமானிக்கக்கூடிய அந்த 'அராப்' இன சாரதிக்கு கோபமே வரவில்லை ( இந்த இடத்தில் 'அடையான்' என்று விளிக்கவில்லை என்பதை மதுரன் கவனிக்கவும் ). அவர் நாலைந்து முறை 'மிசூ மிசூ' என்று என்னைக் கூப்பிட்டிருக்க வேண்டும்..!! காதில் ஷங்கர் மஹாதேவன் 'கையொப்பம் இடுவேன் உந்தன் மார்பில்' வரைக்கும் போய்விட்டார். அதால கூப்பிட்டது கேக்கேல...!!
திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தால், எல்லோரும் புன்னகையோடு என்னையே பார்த்துக்கொண்டு நின்றார்கள். சட்டென்று தாவி பேருந்துக்குள் ஏறி, 'தெசோலே..... குப்பின்' என்று தோள்களைக் குலுக்கி, 'பதில் போடாட்டி கொன்னுடுவாள்' என்பதாக சைகையிலே சாரதிக்குப் புரியவைத்தேன்.
அவரும் 'எல்லா இடமும்' என்று ஒற்றை வரியில் பதிலளித்துவிட்டு புன்னகையோடு பேருந்தை எடுத்தார். ( எனக்கு முதல் நிறையப்பேர் இப்படி மினக்கெடுத்தி இருப்பாங்க போல )
முன்பும் ஒருமுறை இப்படி வைபரில் மெசெஜ் அனுப்பிக்கொண்டே வீதியால் நடந்து போய்க்கொண்டு இருக்கும் போது எதிரே வந்த 'ஆமினாத்த தியலோ' என்று பெயரைக்கொண்ட செனேகல் நாட்டுக்காரி மேல மோதி ஏச்சு வாங்கியதை இந்த இடத்தில் உபரித் தகவலாக சேர்த்துக் கொள்கிறேன் ( ஆமினாத்த என்ற பெயர் எனது ஊகம் மாத்திரமே - ஏனெண்டா ஒரு நாலைஞ்சு பேரைத்தான் எல்லாப் பொம்பிளையளுக்கும் மாறி மாறி வைக்கினம் ).
இன்று காலை 'போர்து கிளிஞ்சான் கூரில்' குறைந்தது 10 செக்கன்களாவது பேருந்தை மினக்கெடுத்தியிருப்பேன். ஆனால் சாரதி கோவிக்கவே இல்லை. இதுதான் காதலுக்கு மரியாதை என்பதோ??
குறிப்பு - படிப்பு விஷயமா ஒரு நண்பனோடு சாட் பண்ணிக்கொண்டிருந்தேன் என்று சொன்னால் இந்த சமூகம் நம்பாது. ஆகவே அது 'குப்பின்' ஆகவே இருக்கட்டும்

"படைப்பாளிகள் உலகம்"

"படைப்பாளிகள் உலகம்" பெருமையுடன் அறிமுகப்படுத்தும் இயக்குனர் சுதேசிகன் சுப்பிரமணியம் அவர்களின் கைவண்ணத்தில் உருவான "பிஸ்டல்" குறும்பட அறிமுகமும், காட்சிப்படுத்தலும் எதிர்வரும் 25-02-2016 அன்று கனடாவில் நடைபெறுவதை பெருமையுடன் அறியத்தருவதோடு,
மட்டுப்படுத்தப்பட்ட ஆசனங்கள் அடங்கிய அரங்கத்தில் நீங்களும் கலந்து சிறப்பிக்க விரும்பின், தயவு செய்து ஆசனங்களை பதிவு செய்யுமாறு தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு :
ஐங்கரன் கதிர்காமநாதன்:
416-568-0039

Disqus Shortname

Comments system

 
Blogger Templates