Social Icons

Samstag, 30. April 2016

கவிஞர் கீழ்கரவை குலசேகரனின் பஞ்சம் போக்கும் தொழிலாளி !,

தொழிலாளி எம் கூட்டாளி !
நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி 
நித்தம் உழைப்பான் தொழிலாளி !
உற்ற நண்பன் அவனே ! இந்த 
உலகம் உய்ய வழிகாட்டி ! [நெற்றி ]

உண்ண உணவும் ,உடுக்க உடையும் 
அவனின் உழைப்பால் உருவாகும் !
எண்ணிப் பார்த்தால் எல்லோர் வாழ்வும் 
அவனின் உழைப்பால் உயர்வாகும் ![நெற்றி]

பாடுபட்டு உழைக்கும் அவனே 
பஞ்சம் போக்கும் தொழிலாளி !,
நாடும் ,ஏடும் போற்றும் அவனே 
நமது இனிய கூட்டாளி !! [நெற்றி


ஆக்கம் கவிஞர்
கீழ்கரவை குலசேகரன்

நடன ஆற்றுகை வெளிப்பாட்டு தேர்வு 07.05.16

நடன ஆற்றுகை வெளிப்பாட்டு தேர்வு 07.05.16 அன்று நடைபெற உள்ளது இதில் ஆவலர்கள் கலந்து சிறப்பிக்க அழைக்கப்படுகின்றீர்கள்  சிறப்பான முறையில் நடனத்தை பயின்று நிற்கும் இளம் நங்கைகளின் ஆற்றலை வெளிப்படுத்தும் ஓர்தளமாக இந்த வெளிப்பாட்டு நடன நிகழ்வில் நீங்களும் கலந்து சிறப்பிக்க வாருங்கள் என அதன் அமைப்பாளர்கள்  ஆற்றுகைவெளிப்பாட்டில் கலந்து சிறப்பிக்கும் இளைய தலைமுறையின் பெற்றோர்கள் அழைக்கின்றார்கள் 




கவித்தென்றல்‬ எழுதிய முதலழகோ

குசும்பு பண்ணும் அம்ச வேணி -அந்த
குபேரன் வீட்டு வம்சமா நீ - உன்
குளிர்ந்த பார்வை என்னில் மேவி - நான் 
கரைந்து போனேன் தென்றலாகி...


இலவம் பஞ்சி இதயம் - பெண்ணால்
இறக்கை முளைச்சி பறந்தது- இந்நாள்
இரவும் உறங்கி கண்ணால் - அடி
இம்சை பண்ணுதே உன்னால்

பாவை மேனி கலவை செய்த மெழுகோ
பார்வை பலரை கொல்லும் கழுகோ
பிரம்மன் இவளின் உறவோ..
பாரில் இவள் தான் முதலழகோ



                         ஆக்கம்கவித்தென்றல்



                     a

கவிஞை ரதி மோகனி குறும்கவிதை"கூடு வந்து சேருமா"

கூடு விட்டு பறந்த
குருவி கூடு வந்து சேருமா ...

காடு மலை தாண்டிய 
வாழ்வில்

கிழக்கு தான் வெளுத்திடுமா....


...

ஆக்கம் கவிஞை ரதி மோகன்

Freitag, 29. April 2016

முல்லைப் பார்த்தா எழுதிய மரணித்த மனிதம் கவிதைத் தொகுதியின் வெளியீட்டு விழா 29.04.16

முல்லைப் பார்த்தா எழுதிய மரணித்த மனிதம் என்ற கவிதைத் தொகுதியின் வெளியீட்டு விழா 29.04.2016 மாலை 4.30 மணிக்கு யாழ். கச்சேரி அருகில் உள்ள வைஎம்சீஏ (YMCA) மண்டபத்தில் நடைபெற்றது.
.
யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை மாணவனும் அகில இலங்கை இளைஞர் இலக்கிய மன்றத்தின் அமைப்பாளருமாகிய ஸ்ரீ. சிவஸ்கந்தஸ்ரீ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக நான் கலந்து கொண்டேன்
.
நிகழ்வில் வரவேற்புரையை சட்டத்துறையின் புகுமுக மாணவி ப. கதிர்தர்சினியும் ஆசியுரையை முல்லை வலய தமிழ்ப்பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் கி. கௌரிபுத்திரியும் வாழ்த்துரைகளை முத்தையன்கட்டு வலதுகரை மகா வித்தியாயலய அதிபர் சி. நாகேந்திரராசாவும் கனடா - படைப்பாளிகள் உலகம் நிறுவுநர் ஐங்கரன் கதிர்காமநாதனும் ஆய்வுரையை யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட உதவிப் பதிவாளர் இ.சர்வேஸ்வராவும் ஆற்றினர்.
.
கற்சிலைமடு ஒட்டிசுட்டானைச் சேர்ந்த கனகரட்ணம் பார்த்தீபன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையில் மூன்றாம் ஆண்டில் பயின்றுகொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. .
தொகுதியில் உள்ள கவிதைகளில் பெரும்பாலானவை போர் வலியைப் பாடுவனவாக உள்ளன.

கவிஞை ரதி மோகனி கன்னம் கிள்ளி போகாதே..

அச்சச்சோ தள்ளி நில்லு
வெள்ளிக்கிழமை விரதமாச்சு
வாசல் தெளித்து கோலம் போட
வழிவிட்டு நீயும் செல்லு...


பட்டாம் பூச்சிபோலநீ
சுத்தி சுத்தி வராதே
சத்தம் போட்டு திட்டமுன்
ஒதுங்கி கொஞ்சம் நில்லு...


சமையல்கட்டில் உதவிஎன
சாதுரியம் செய்யாதே
உன் எண்ணம் புரியுமெனக்கு
கன்னம் கிள்ளி போகாதே....


வானம் வெளுத்திருக்கு
புதுப்பொழுது புலர்ந்திருக்கு
பானம் நீ பருகு
பாணம் கண்ணில் எதற்கு.
...

ஆக்கம் கவிஞை ரதி மோகன்

Donnerstag, 28. April 2016

கவித்தென்றல்‬ எழுதிய கானல் நீராய் தெரிகிறது..

வெயில் அடிக்கும் வேகத்திலே..!
தரை நரம்பு வெடிக்கிறது..
பசியோடும் தாகத்தோடும்
பல உயிர்கள் துடிக்கிறது..!

காற்றதுவோ கடமையினை
இடை நிறுத்தம் செய்கிறது..
புழுக்கம் வந்து தேகமெல்லாம்
பருக்கள் தூவிப் போகிறது..!

பார்க்கின்ற இடங்களெங்கும்
கானல் நீராய் தெரிகிறது..
அனல் கலந்து காற்று வீச
நிழல்கள் கூடச் சாகிறது..!

கால் நடைகள் நாவறண்டு
தாகம் தீர்க்க அலைகிறது
தரையதுவோ மீதமின்றி
தண்ணீர் யாவும் குடிக்கிறது..!

குளங்களும் ஆறுகளும்
குற்றுயிராய் கிடக்கிறது..
பசுமையான இடங்காளெல்லாம்
பொசுங்கிப் போய் தெரிகிறது..!

சூரியனைக் கண்டு மழை
தூரம் ஓடி ஒழிக்கிறது..
வெண் மேகம் கூடினின்று
வரும் மழையைத் தடுக்கிறது..!

இன்னும் ஊன்றி வெயிலடித்து
இத்தரணி இறக்குமுன்னே..!
இறைவா உந்தன் அருளதனை
இறக்கிவிடு அவனியிலே..!


                                         ஆக்கம்
                                                                
                                      வித்தென்றல் 


மீரா குகனின் காலத்தின் மூங்கில் நாதம்

வெற்றிடத்தில் உயிர் கொள்ளும் 
சுதந்திர காற்றின் மூச்சில் 
மூங்கிலின் முழிப்பு

மூர்க்கமாய் 
போர் தொடுக்கும் 
சிறப்புகளின் தனிமையில்
தளராத முயற்சியில் எழும் 
இனிமையின் 
இசை ஆர்ப்பரிப்பு

வீறாப்பின் விலகலில்
வீழ்ச்சி விதையாயிருந்தால் 
புல் புதருக்குள் 
கீதம் மறைந்தே 
காணாமல் போயிருக்கும்

செவிப்புலன் அடங்கி 
இசைக்காத இசையில் 
நயம் மட்டும் 
நனைந்திருக்கும்

ஆக்கம் மீரா குகன்        ஜெர்மனி

Mittwoch, 27. April 2016

கவித்தென்றல்‬ எழுதிய பார் மகளே உலகை...

ஆராரோ ஆரிரரோ

ஆகாய வெண்ணிலவே
அழகே என் கண்மணியே
ஆனந்தமாய் நீ கண்ணுறங்கு


வடிவமைத்து பொய்களும் சொல்லிடுவார்
வாழும் வழியதை கண்ணில் மறைத்திடுவார்
தெளிவோடு நீயிரு கண்மணியே 
தாலாட்டு பாடுறேன் உனையெண்ணியே.

கல்வியே உன் வாழ்வின் வழிகாட்டி
நான் வளர்பேன் அதை தினம் ஊட்டி
எதிரியிடம் போடனும் நீ போட்டி
சீறி பாய நீ ஆகிடு ஈட்டி..

கண்மணியே கண் திறந்து பாரு உலகை
உன்னை சுற்றி இருப்பதெல்லாம் மாயை
உலகில் உன் தெய்வமாய் வாழும் தாயை
உணர்வோடு காத்திடுவாயே..
கண்மணியே கண்ணுறங்கு


ஆக்கம்
கவித்தென்றல் 

Dienstag, 26. April 2016

குமுதினி ரமணனின் வானத்து தேவதையோ.

பட்டு வண்ணக் கன்னம்.
பரந்துபட்ட எண்ணம்.
மெழுகில் செய்த சிலையோ
மேலைநாட்டுக் கலையோ.
மிடுக்காக பார்வையில்
மெட்டமைக்கும் பாவை.
சீனத்துப் பைங்கிளியோ.
வானத்து தேவதையோ.
கையுக்குள் உலகாழும் நவீனத்தின் ராணி.
உனை பாட்டெழுத கேட்பார் அமுதசுரபி ஞானி


ஆக்கம் குமுதினி ரமணன்  யேர்மனி:

                                                                             

‎ஈழத்துப்பித்தனின்‬ பனி பூப்பெய்தும் காலம்

சித்திரையில் கதிரோன்
சிரித்திடுவான் நாளும் என
எண் திசையும் விழி வைத்து
எதிர் நோக்கிக் காத்திருந்தால்
பெண்ணவள் நாளும் விழி உடைத்து
பெய்திடும் கண்ணீர் போல்
மூக்கை சிந்தி வான மகள்
முகம் கறுத்துக் கிடக்கிறாள்


புவி பூப்பெய்தும் காலமதில் - பனி
பூத்து சொரியுது இங்கு
காலம் தப்பி காலம் மாறி
காலாகாலமா இருந்த 
கால நிலை மாறுவது
காலத்தின் கோலமன்றோ...



ஆக்கம்
ஈழத்துப்பித்தன்

அன்னை பூபதி, மற்றும் நாட்டுப்பற்றாளர்கள் நினைவெழுச்சி நாள் சுவிசில் 24.4.2016 நடந்தது

தமிழரின் வாழ்நாள் நினைவோடு ஒன்றிப்போன வீர்களே மாவீரர்களும் நாட்டுப்பற்றாளர்களும் வரலாறு தோறும் வாழும் ஐீவிகள் தமிழ் இனத்தின் உயிர் நாடிகள் இவர்களை  மறப்போமா....?அந்தவகை 
யில் கடந்த 24.4.2016 அன்று சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற அன்னை பூபதி, மற்றும் நாட்டுப்பற்றாளர்கள் நினைவெழுச்சி நாள் நிகழ்வுகளின் பதிவுகள்  இணைப்பு சில இங்கே


                    

                      

நெடுந்தீவு அரவிந்தின் பிறந்தநாள் பரிசு

மழைக்கால இராத்திரி
தாழ்வாரங்ளில் வடியும்
ஒற்றை மழைத்துளிகளை
ஏந்தியபடி உன் உணர்வுகள் மெய் சிலிர்க்கும்
ஓர் முத்தத்திற்கு
அன்றுதான்
பழக்கபட்டிருப்பாய்.


இந்த நடுநிசியின் கொஞ்சல்களின்
பெருவெளியில்
என் மார்புமுடிக்கு
உன் உதடுகள் ஒத்தடம்
கொடுத்து
வெட்கபட்டுக்கொண்டாய்.


உன் தனிமத்தில்
வண்டல் வண்டலாய்
பெருக்கெடுக்கும்
அழுதுதீர்த்த அபூர்வ 
நேசங்களின் பழங்கதை
பேசி முடித்திருந்த
மூன்றாம் ஜாமத்தில்
நம் பிரிவுகளுக்கான
ஏற்பாடும் நிறைவேற்றப்பட்டிருந்தது




ஆக்கம் நெடுந்தீவு அரவிந்
.

Montag, 25. April 2016

தாயக இசைச் சங்கமம் - 08.05.2016

சூரிச் அருள்மிகு சிவன் கோவில் சைவத் தமிழ் சங்கம் நடாத்தும்
''தாயக இசைச் சங்கமம்''
தாயகத்தின் புகழ் பூத்த இசை மன்னர்கள் சங்கமிக்கும் இசைக் கச்சேரி நடைபெறவுள்ளது இதில் பத்தர்கள் பார்வையாளர்கள் கலையார்வலர்கள் என கலந்து சிறப்பிக்க அழைக்கின்றார்கள் ஆலயநிவாகத்தினர்

கவிப்புயல் இனியவனின் குறும்கவிதை:காதலித்தவர்களே

காதலித்தவர்களே
கரம் பிடித்தால் 
கவிஞர்கள் தோன்ற
வாய்ப்பில்லை,,,,,

காதல் தோல்வி,,,,
மட்டுமே கவிதைகள்,,,
தோன்ற காரணமும்,,,
இல்லை,,,,!

ஆக்கம் கவிப்புயல் இனியவன்

நெடுந்தீவு தனுவின் தமிழ் மகள்.

மென் இடை கொண்டு
மெல் நடை பூண்டு..


சொல் மொழி பேசி
வில் விழி எய்து..


தலை கோதி விட்டு
நடையோடு மோதி..


பொட்டொன்று வைத்து
சட்டென்று உணர்த்தும்..


குல மகள் இவளே.
எம் தமிழ் மகள் இவளே.

என்றும் கீறல்களின் முனையில்.

ஆக்கம் நெடுந்தீவுநெடுந்தீவு தனு இன் சுயவிவரப் படம் தனு

Sonntag, 24. April 2016

மஞ்சு மோகனின் என்னை நான் விடுவிப்பேன்...


கண்ணீரால் உனை எண்ணி 
கவிதைகள் பல வரைந்தேன்.
காரிகை என் வாழ்க்கையிலே,
கவலைகள் தான் மிச்சமா?



கண்ணே மணியே கிளியே என்றாய்.
காதல் மொழிகள் பேசியே வென்றாய்.
கன்னிப்பருவங் கொள்ளை கொண்டாய்.
கனவிலும் கண்ணீரில் மிதக்க வைத்தாய்.



வஞ்சியவள் நானும் உந்தன் - ஆசை
வலையினில் விழுந்துதான் போனேன்.
பத்தோடு பதினொன்றாக - என்னை
பதம் பார்த்துத்தான் சென்றுவிட்டாய்.



எண்ணி எண்ணி ஏங்குகிறேன்.
ஏமாந்த மனமதை தேற்றுகிறேன்.
உன்னைச் சொல்லிக் குற்றமில்லை..
உணர்வதற்கு ஒரு வழி சமைத்தாய்.



புதுமைப் பெண்ணைப் பாடிய,
பாரதியும் ஆண்தானடா! 
பெண்விடுதலை நிதமும் பேசிய,
விவேகானந்தனும் தாய்மகன்தானடா!



அவ்வழி வந்த நீயும்தான் யாரடா?
எவ்வழி சிந்திய நீயுமோர் பேயடா?
எப்பிறப்பில் நீ வந்திருந்தாலும், 
என்னெழுச்சி இனி மாறாதடா!



தடுமாறித் தடக்கிவிழுந்ததும்,
தடையென்று எண்ணேனடா
என்னை நான் மாற்றுவேன்!
என்னை நான் விடுவிப்பேன்!



என்னருமை தெரியும் நாளது,
வெகுதூரத்தில் இல்லையுனக்கு.
அன்று நான் உன்னைவிட்டு,
தொலை தூரம் போயிருப்பேன்.

ஆக்கம் மஞ்சு மோகன். கனடா

கவிஞர் எழுத்தாளர் தயாநியின் ரணங்கள்..!

 
ஆயிரம் கண்ணீர்
கவியங்கள்
எங்கள் மரண
பூமியிலே..
திறந்த வெளிச்
சிறைச்சாலைகள்
எங்கள் ஊரினிலே
முள்ளி வாய்க்கால்
முடிவில் எங்கள்
முகவரியானது
கம்பி வேலிகள்.....!

இன்று சிரியா
நாட்டு அகதிகள்
முகவரியிழக்க
தாண்டும் கம்பி
வேலிகள்..... இது
உலகத்தின் கண்ணுக்கு
தெரிந்தது போல்
எங்கள் வேலிக்
கொடுமைகள்
தெரியாமல் போனது
எங்கனம்.?

ஆக்கம்  கவிஞர் எழுத்தாளர் தயாநி

எம் .எஸ் .கந்தையாவின் நூல் அறிமுக விழா-ஒரு பார்வை


எம் .எஸ் .கந்தையாவின் 
சிதைக்கப்பட்ட மலையகத் தமிழர்கள் -நூல் அறிமுக விழா-ஒரு பார்வை 
எம் .எஸ் .கந்தையா எழுதிய  "சிதைக்கப்பட்ட மலையகத் தமிழர்கள்"  எனும் நூலின்  அறிமுக விழாவானது 23.04.2016(சனிக்கிழமை ) காலை 10 மணிக்கு கண்டி கச்சேரி தொழில் திணைக்கள கேட்போர் கூடத்தில் எழுத்தாளர் திரு.பெ .முத்துலிங்கத்தின் தலைமையில் இடம் பெற்றது. இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கல்வி இராஜாங்க அமைச்சர்  திரு.வே.கிருஷ்ணன் கலந்து சிறப்பித்திருந்தார்.வரவேற்புரையினை மக்கள் கலை இலக்கிய ஒன்றியத் தலைவர், ஊடகவியலாளர்  திரு.இரா .அ.இராமன் நிகழ்த்தினார். நூல் பற்றிய கருத்துரையினை திரு .ஆர் .நித்தியானந்தன் நிகழ்த்தினார்.இவர்தம் உரையினில்,இற்றைவரை மலையகச் சமூகம் பல்வேறு வகையினில் நசுக்கப்பட்டு வருகிறது.இற்றைவரை இலங்கையின் அபிவிருத்திக்கு முதுகெலும்பாக இருந்துவரும் சமூகத்தின் உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்ட வண்ணமே உள்ளது. அதனைத் தனது சொந்த அனுபவத்தின் ஊடாகவும்,அவதானிப்பின் ஊடாகவும் நூலாசிரியர் பதிவு செய்துள்ளார் என்று குறிப்பிட்டதுடன்,கடந்த காலங்களில் எவ்வாறெல்லாம் மலையகச் சமூகத்தினர் சுரண்டப்பட்டனர்,என்பதை ஆதார பூர்வமாகக் குறிப்பிட்டு அதனை எவ்வாறு இந்த நூல் உள்வாங்கியுள்ளது என்பது குறித்து விளக்கமளித்தார். பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்திருந்த கல்வி இராஜாங்க அமைச்சர்  திரு.வே.கிருஷ்ணன் ,மலையக சமூகம்சார் ஆவணப் பதிவு என்ற ரீதியில் இந் நூல் குறித்த முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். 
இந் நூல் குறித்த மதிப்பீட்டு உரையினைப் பேராதனைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளர் திரு .எம் .எம் .ஜெயசீலன் அவர்கள் சிறப்பாக நிகழ்த்தியிருந்தார். இவர் தனது மதிப்பீட்டு உரையிலே,மலையகத் தமிழர்களது இலங்கை வருகை,அவர்கள் அனுபவித்த கொடுமைகள், பிரஜா உரிமை மறுக்கப்பட்டு மீண்டும் இந்தியா அனுப்பப்பட்டமை, இன்றுவரை அவர்கள் எதிர் நோக்கும் இன்னல்கள் முதலிய யாவற்றையும் வரலாற்று நிகழ்வுகளைத் துணைக்கொண்டு விளக்கமளித்ததுடன்,இந் நூல் அதனை எவ்வாறு பதிவு செய்துள்ளது என்பதனையும் தெளிவாக எடுத்துரைத்தார். மலையகத் தமிழர்கள் மீண்டும் இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட போது,இந்திய திரும்பியவரே "சிதைக்கப்பட்ட மலையகத் தமிழர்கள் " நூலின் ஆசிரியர் மு .சி .கந்தையா.இந்தியா சென்று குடியேறத் தலைப்பட்ட மலையக மக்களுக்கு தமது பூர்வீகமான இந்தியாவிலும் அதிருப்தியே காத்திருந்தது எனலாம்.இற்றைவரை பிரித்தானிய அரசின் சுயநலத்துக்காகப் பயன்படுத்தப்பட்ட மக்கள் வடுக்களைச் சுமந்தபடியே வாழ்கின்றனர் என்றார். நன்றி உரையினை திரு .சந்தானம் சத்தியநாதன் நிகழ்த்தினார். 
என்னுடைய நோக்கு நிலையில் இந் நூல் மலையக மக்களது வாழ்வியலைப் பதிவு செய்திருக்கும் சிறப்பான ஆவண நூலாகும்.,இன்று வரை அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் தீர்க்கப் படவில்லை எனலாம். அவர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல்வாதிகளும்,அவர்களது பிரச்சனைகலுக்குப் பூரணமான தீர்வினைக்   காணத் தவறிவிட்டனர் எனலாம். பிரஜா உரிமை மறுக்கப்பட்டு மீண்டும் இந்தியா சென்ற மக்கட் கூட்டம் எதிர் நோக்கிய பிரச்சினைகள் வித்தியாசமானவை. தமிழர் வரலாற்றில் தொடர்ந்தும் தமிழர்கள் கசப்பான உணர்வுகளையே நுகர்ந்து கொண்டிருக்கின்றனர்.எமது உழைப்பை சுரண்டி,உரிமைகளைப்  பறித்து வேறு இனக் குழுமங்கள் குளிர் காய்ந்து கொண்டிருகின்றன.இந்த நிலை என்று மாறும் ?

                 
ஆய்வு: சேமமடுவூர்சிவகேசவன் 
                           தமிழ்த்துறை 
                 பேராதனைப் பல்கலைக்கழகம் .





கவிஞர்சுபாரஞ்சனின் குறும்கவிதை பூம்பனி பொழிகிறது

பனிக் குமிழிக்குள் 
சிறைப் பிடிக்கப்பட்ட 
வசந்தகால துளிர்கள்
அழுதிடுமோ......

பருவச் சுழற்சி 
பாதைமாற
பூம்பனி பொழிகிறது.....

ஆக்கம் கவிஞைர்
சுபாரஞ்சன்

Freitag, 22. April 2016

.இசைத்துறை கலைஞை சுபதாவின் பிறந்தநாள்வாழ்த்து (22.04.16)

இன்று தனது பிறந்தநாளைபரிசில்கொண்டாடுகின்றார் சுபதா  தில்லைச்செல்வம் இவரை பெற்றோர், உ டன்பிறந்தோர் ,உற்றார் ,உறவினர், நண்பர்கள்  இணைந்து  பிறந்த நாளைக் கொண்டாடும் இவரை.

எம்மவர் இணையம் எஸ்.ரிஎஸ்  ஈழத்துக்கலைஞர்கள்சார்பில் இவர் கலை வானில் சிறக்க  இனிதே என்றும் வாழ்க வாழ்க பல்லாண்டு எனவாழ்த்துகள்

இசைக்கவிஞன் ஈழத்துஇசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா

எஸ்.ரிஎஸ்.இணையம்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோகோட்டை இணையம்
சிறுப்பிட்டிகொம்இணையம்

ஊடகவியலாளர் முல்லைமோகன்
"பிரியாலயம் கலையகம்

பிரியாலயம் அவர்களின் வாழ்த்து கிழ் இணைக்கப்பட்டுள்ளது

இசை வேந்தரின் குடும்பத்தின் முதல் மகள்
இவள் பொது வாழ்வில்
சேவை புரிவதை இலக்காக கொண் டவள்,
தந்தைக்கும் இசைத் தொண்டு புரியும் நல்லாள்.
இப் பொன்னாளில் எங்கள் செல்வ மகளுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்,
வாழ்க வளமுடன் ...
"பிரியாலயம் கலையகம்

முத்த கலைஞர் தயாநியின்முல்லைமோகனின் பிறந்தநாளுக்கான வாழ்த்து.!


இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்....
===============================
முல்லைக்கு புகழ் சேர்த்தான்
பாரி வேந்தன். எங்கள்
தமிழ் அன்னைக்கு புகழ் சேர்ப்பவன்
முல்லை மோகன்.
அறிவிப்பும் ஆற்றலும்
அரங்கப் பண்பும்
அழகிய தமிழ் உச்சரிப்புடன்
உதிரும் மதுரக் குரல்.
இன்னல்கள் அனைத்தையும்
மின்னல் வேகத்தில் களைந்து
திடமான உழைப்பும் உயர்வும்
என் மனதில் அழகிய மாடத்தில்
உனக்கான தனி இடம்..
ஐயமில்லை. வாழ்க வளம்
வாழ்த்துவதற்கு தமிழை
தேடிக் களைத்து விட்டேன்
தமிழைத் தமிழ் வாழ்த்தவா..!
வேடிக்கையானது. ஆனாலும்
வாழ்த்தும் கடன் எனக்கானது
கூடிக்களிக்கும் ஒரு நாள்
வரமாக அமைந்திட என்
அன்னை தமிழை வேண்டி
விடை பெறுகின்றேன்
வாழ்க வாழ்கவே..
அன்புடன்
ரி.. தயாநிதி.
பிரான்ஸ்.

Disqus Shortname

Comments system

 
Blogger Templates